‘இனிமே தான் கேம் ஆரம்பம்’ சுரேஷ் சக்கரவர்த்தியால் கொந்தளிக்கும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்!

 

‘இனிமே தான் கேம் ஆரம்பம்’ சுரேஷ் சக்கரவர்த்தியால் கொந்தளிக்கும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 3ஆவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி மீது ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் கோபத்தில் இருக்கும் சூழலிலும், இந்த வாரத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார். சில நாட்களுக்கு முன்னர் அனிதா சம்பத்திடம் வம்பிழுத்த சுரேஷ் இன்று வேல முருகன், ரியோ என எல்லா ஹவுஸ் மேட்ஸ் உடனும் மோதலில் ஈடுபடுகிறார்.

‘இனிமே தான் கேம் ஆரம்பம்’ சுரேஷ் சக்கரவர்த்தியால் கொந்தளிக்கும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்!

இந்த நிலையில், தன்னை ஹவுஸ் மேட்ஸ் டார்கெட் செய்வதாக சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸிடம் கூறுவது போல 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் எல்லாரும் குரூப் ஆக சேர்ந்து என்னை டார்கெட் செய்கிறார்கள் என சுரேஷ் சக்கரவர்த்தி சொல்ல, கடுப்பான ரியோ அதற்கு விளக்கம் கேட்கிறார். ஆனால் இது கேம் எனக்கூறி சுரேஷ் அங்கிருந்து நழுவுகிறார்.

‘இனிமே தான் கேம் ஆரம்பம்’ சுரேஷ் சக்கரவர்த்தியால் கொந்தளிக்கும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்!

இதனிடையே சனம் ஷெட்டி, வேல் முருகன், அனிதா என எல்லாரும் சேர்ந்து ‘கேம் இப்போ தான் ஆரம்பிக்கிறது’ என கூறுகிறார்கள். அந்த சாக்கில், சுரேஷ் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டதால் ஆத்திரமடைந்த ரியோ சோபாவில் குத்துவது போல புரோமோ முடிகிறது. கொளுத்தி போடுறதுல வனிதாவையே ஜெயிச்சிட்டாரு சுரேஷ் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.