“கொரோனா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கொள்ளையடித்த மருத்துவமனை” – நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!

 

“கொரோனா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கொள்ளையடித்த மருத்துவமனை” – நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!

சென்னையைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் என் தந்தை குமாரை அனுமதித்தேன். வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையிலும், உரிய சிகிச்சை வழங்காததால் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் இறந்துவிட்டார். அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

“கொரோனா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கொள்ளையடித்த மருத்துவமனை” – நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!

ஆனால் எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த வேண்டுமென நிர்பந்தப்படுத்தி மொத்தமாக 10 நாட்கள் சிகிச்சைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் வசூலித்தது. தவிர தந்தையின் மருத்துவச் செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களைக் கேட்டேன். அதற்கு வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கினார்கள்.

Madras High Court - Wikipedia

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுத்தார்கள். ஆகவே தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியே தமிழக சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரிடம் புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையைத் திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த தனியார் மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.