சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!

 

சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!

தொன்று தொட்டு காலத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு தேன் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை புழக்கத்துக்கு வருவதற்கு முன்னர், இனிப்புக்கு தேன் தான் பயன்படுத்தப்படும். பின்னர், காலப்போக்கில் இயற்கையான தேன் அரிதான பொருளாக மாறிவிட்டது. தேனில் இயற்கையாக இருக்கும் நற்குணங்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். எந்தெந்த வழிகளில் தேனை நாம் உட்கொள்ளலாம் என்பது பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்..

சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!

பெரும்பாலும் உடல் எடை குறைப்பதில் அதிகளவில் தேன் பயன்படுவதாக மருத்துவர்களே தெரிவிக்கின்றனர். அதில் கொழுப்பு மற்றும் சோடியம் இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சர்க்கரையை போன்றது தான் தேனும் என பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தேனில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சர்க்கரையில் இல்லையென ஆராய்ச்சிகள் நிரூபித்து விட்டன.

சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!

எடை குறைப்பு:

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும். இது நம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை சமப்படுத்துவதோடு, பசியை அடக்கும். அதுமட்டுமில்லாமல், தேவையில்லாமல் எண்ணெய் உணவுகள், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உட்கொள்ளும் கிரேவிங்ஸை கட்டுப்படுத்தும். மேலும், இருதயக் கோளாறுகளையம் சரி செய்யும்.

சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!
  1. சமையலில் தேனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இரவு உணவை உட்கொள்ளும் போது தேனை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, சப்பாத்தி அல்லது சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் போது ஆரோக்கியமான உணவாக இது அமையும்.
  2. சூடான பாலில் தேனை கலந்து குடிக்கலாம். காய்ச்சிய பாலில் கலோரிகள் குறைவாகவே இருக்குன். அதனுடன் தேனை கலந்து குடிக்கும் போது எடை குறைவு வேகமாக நடைபெறும். இதை மருத்துவர்கள் பலரும் பரிந்துரைக்கிறார்கள்.
  3. சூடாக இருக்கும் தண்ணீரில் தேனை கலந்து குடிப்பது தவறு. அது, தேனில் இருக்கும் நற்குணங்களை போக்கிவிடும். அதனால், வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் தேனும் எலுமிச்சை சாறும் சேர்த்து தினமும் காலை பருகினால் எடை குறையும்.
  4. வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடிப்பது சிலருக்கு பிடிக்காது. அவர்கள் லெமன் டீயில் தேனை கலந்து குடிக்கலாம். தேநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். தினமும் 2 முறை இதை பருகலாம்.
  5. உணவில் சர்க்கரையை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால் நல்லது. ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஓட்ஸ் உடல் எடை குறைப்பதில் சிறந்த உணவு. அதனால், ஓட்ஸ் உடன் தேனை கலந்து சாப்பிடும் போது உடல் எடை நன்றாக குறைவதை நீங்கள் உணர முடியும்.
  6. லவங்கப்பட்டை பல நற்குணங்களைக் கொண்டது. மேற்கத்திய உணவு முறைகளில் பட்டைத்தூள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் மசாலாக்கள் மற்றும் தேன் சேர்த்து உண்ணலாம்.
சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா?.. அப்போ தேனை இப்படி சாப்பிடுங்க..!

சிலருக்கு தேன் மற்றும் எலுமிச்சை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு மேற்கண்ட சில டிப்ஸ்களை பின்பற்றலாம்… என்ன தான் உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலும் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…!