சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை போக்கும் மாதுளை ஜூஸ்!

 

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை போக்கும் மாதுளை ஜூஸ்!

சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டாலும், வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாதிப்பின் தீவிரத்திலிருந்து தப்பலாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றை போக்கும் மாதுளை ஜூஸ்!

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்னைகளுள் ஒன்று. பெண்களின் பிறப்புறுப்பும், ஆசனவாயும் மிக அருகருகே இருப்பதால் மலம் கழிக்கும் போது இ-கோலை பாக்டீரியா தொற்று சிறுநீர்ப்பாதையில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது சிறுநீர்ப் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் என எந்த ஒரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறுநீரக செயலிழப்பு வரை மிகப்பெரிய பிரச்னையாகவும் மாறலாம் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கான இயற்கை வழிகளைப் பற்றிக் காண்போம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று வந்தால் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி செய்யும்போது சிறுநீர் அளவு அதிகரிக்கும். சிறுநீர் வெளியேறும் போது கிருமியும் வெளியேற்றப்படும்.

அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரின் அடர்த்தி குறைகிறது. இதனால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் வலி குறையும்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று உள்ள நேரத்தில் திரவ உணவு, ஜூஸ் எடுப்பது நல்லது. அதிலும் குறிப்பாக மாதுளை ஜூஸ் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை எதிர்த்துச் செயலாற்றும் ஆற்றல் கொண்டது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் சி உள்ளிட்டவை நிவாரணம் அளிக்கின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியா சிறுநீர்ப் பைக்குள் நுழைவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

அதே போல் க்ரேன்பெர்ரி ஜூஸ், ப்ரோபயாடிக்ஸ், ஆரஞ்சு, கிவி, லெமன் போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள ஜூஸையும் எடுத்துக்கொள்ளலாம். ஜூஸ் அருந்தும்போது அதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க பொது சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது!