இந்திய-சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு…

 

இந்திய-சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு…

இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் சீன எல்லையை ஒட்டி நடைபெற்று கொண்டு இருக்கும் சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் உயர் மட்ட சந்திப்பை நேற்று நடத்தியது. அந்த கூட்டத்தில் மத்திய பொது பணிகள் துறை (சி.பி.டபிள்யூ.டி.), எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ.) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய-சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு…அந்த கூட்டத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டங்களில் 32 சாலை திட்டங்களை விரைவுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய-சீனா எல்லையை ஒட்டி மொத்தம் 73 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையின்கீழ் அந்த சாலை திட்டங்களில் சி.பி.டபிள்யூ.டி. 12 பணிகளையும், பி.ஆர்.ஓ. 61 பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்திய-சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு…

லடாக்கில் குறைந்தபட்சம் 3 சாலை திட்டங்கள் பி.ஆர்.ஓ.வால் கட்டப்படுகின்றன என மற்றொரு அதிகாரி ஒருவா் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 2017 முதல் 2020 வரை எல்லையில் 470 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளுக்கு வெட்டு பணிகள் முடிவடைந்தது. அதேசமயம் 2008-17 காலத்தில் வெறும் 170 கி.மீட்டர் தூரத்து மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது என தெரிவித்தனர்.