ஈரோட்டில் 300 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

ஈரோட்டில் 300 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதித்த 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 300 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

இதுகுறித்து ஆணையாளர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி இல்லாமல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அந்தந்த ஏரியாவுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள நர்சுகள் தினமும் சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள வழிமுறைப்படி வீடுகள்,தனி அறைகள் கழிப்பறை வசதி இருந்தால்தான் அந்த நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

ஈரோட்டில் 300 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை