புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

 

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொட்டி வரும் மழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி, கடலூர், விழுப்புரம் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புதுச்சேரி பெய்து வரும் தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்து புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.