HIV பாதித்த பெண்ணை பணியில் இருந்து நீக்கியது செல்லாது: 3 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் அதிரடி!

 

HIV பாதித்த பெண்ணை பணியில் இருந்து நீக்கியது செல்லாது: 3 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் அதிரடி!

HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பணியில் இருந்து நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புனே: HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பணியில் இருந்து நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த அங்குள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில், அப்பெண்ணுக்கு HIV தொற்று இருப்பதை அறிந்த அந்த நிறுவனம், முன் அறிவிப்பு ஏதும் இன்றி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இது தொடர்பாக, தொழிலாளர் நல நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அந்த வழக்கின் நேற்று வெளியாகியது.

அதில், “HIV-யைக் காரணம் காட்டி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், 3 ஆண்டுகளுக்கான ஊதிய நிலுவையையும் வழங்க நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இது குறித்து அப்பெண் கூறுகையில், HIV நோய் தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இழந்த தனது பணியை மீண்டும் திரும்பப்பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.