’ட்ரம்ப் ஒரு…’ அவரின் சகோதரி வெளியிட்ட தகவல் – சூடு பிடிக்கும் தேர்தல்

 

’ட்ரம்ப் ஒரு…’ அவரின் சகோதரி வெளியிட்ட தகவல் – சூடு பிடிக்கும் தேர்தல்

2020 – நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

துணை அதிபராக ஜனநாயகக் கட்சி சார்ப்பில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார்.

’ட்ரம்ப் ஒரு…’ அவரின் சகோதரி வெளியிட்ட தகவல் – சூடு பிடிக்கும் தேர்தல்

ஒருபக்கம் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அமெரிக்காவில அதிகரித்தாலும், தேர்தல் களம் அனல் கக்கத் தொடங்கிவிட்டது, கமலா ஹாரீஸின் குடியுரிமை குறித்து கேள்விகள் எழுப்பி, எதிரணியைத் திக்குமுக்காடச் செய்துவருகிறார். ட்ரம்பின் குற்றசாட்டுகள் உண்மைதானோ என்று அமெரிக்காவின் ஒரு பிரிவினர் நம்பத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ட்ரம்ப் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்களை அவரின் சகோதரி மரியன்னே ட்ரம்ப் பாரி கூறிவருகிறார்.

’ட்ரம்ப் ஒரு…’ அவரின் சகோதரி வெளியிட்ட தகவல் – சூடு பிடிக்கும் தேர்தல்

மரியன்னே ட்ரம்ப் பாரியின் பேச்சை, அவரின் மருமகள் ரகசியமாகப் பதிவு செய்திருக்கிறார். அதன் விவரங்கள் அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான வாஷிங்க்டன் போஸ்ட்டில் வெளியானது.

’ட்ரம்ப் ஒரு பொய்யர். எந்தக் கொள்கையும் இல்லாதவர்’ என்று அவர் சகோதரி மரியன்னே ட்ரம்ப் பாரி கூறியுள்ளார். தனது சகோதரியின் கருத்துகளை கடுமையாக மறுத்துள்ளார் ட்ரம்ப்..

ஆனால், அமெரிக்க தேர்தல் பிரசாரங்களில் இந்த விவாதம் இனி வரும் காலங்களில் சூடு பரக்க பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஜனநாயக் கட்சியின் சார்பாக, ட்ரம்ப பற்றிய இன்னும் பல விஷயங்கள் வெளியே கொண்டுவரக்கூடும் என்றும் தெரிகிறது.