லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ரூ.2,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ரூ.2,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,477.4 கோடி ஈட்டியுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,477.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,052.30 கோடி ஈட்டியிருந்தது.

லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ரூ.2,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
எச்.பி.சி.எல்.

2020 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் வருவாயாக ரூ.51,773.3 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.9 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வருவாய் 60,868.40 கோடியாக உயர்ந்து இருந்தது.

லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. ரூ.2,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
எச்.பி.சி.எல்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் மொத்தம் ரூ.59,127.31 கோடி செலவிட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மொத்தம் ரூ.65,237.24 கோடியை செலவிட்டு இருந்தது. இந்நிறுவனம் மொத்தம் ரூ.2,500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு பங்கின் விலையை ரூ.250 என நிர்ணயம் செய்துள்ளது.