கூட்டம் கூடாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம்: இந்து முன்னணி

 

கூட்டம் கூடாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம்: இந்து முன்னணி

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றே தீருவோம் என்று இந்து முன்னணி, எச்.ராஜா உள்ளிட்ட ஒரு சில பா.ஜ.க நிர்வாகிகள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் நலன் கருதி பொது ஊரடங்கு உள்ளதால் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைச் சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களில் ஜெயின் மத விழாவையொட்டி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் அதிகம் கூடும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.

கூட்டம் கூடாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம்: இந்து முன்னணி

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று வீடு, கோயில், தனியார் இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. சிலைகளை வழிபட்டபின் மாலையில் நீர்நிலையில் கரைத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விநாயகர் சிலைகளை வழிபட்டபின் அவரவர் ஏற்பாடுகளில் கூட்டமாக சேராமல் மாலையில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்தது.