“உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தை வேதனை” : ரஜினியுடன் கூட்டணி வைக்க தயாரான இந்து மக்கள் கட்சி!

“உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தை வேதனை” : ரஜினியுடன் கூட்டணி வைக்க தயாரான இந்து மக்கள் கட்சி!

ரஜினியின் ஆன்மீக அரசியல் மக்களை ஈர்க்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நேற்றைய ஹாட் டாபிக்கே நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்தது தான். 90 காலகட்டங்களில் இருந்து தான் அரசியலுக்கு வருவதாக தனது படங்களில் மூலம் மக்களுக்கு சமிக்ஞை கொடுத்து வந்த ரஜினி கிட்டத்தட்ட பல ஆண்டுகளாகியும் அரசியல் கட்சிக்கு வராமலேயே இருந்தார்.

“உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தை வேதனை” : ரஜினியுடன் கூட்டணி வைக்க தயாரான இந்து மக்கள் கட்சி!

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த ரஜினி அதற்கான எந்த முனைப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தார் . தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ரஜினி ஆதரவாளர்கள் அவரை நோக்கி கேள்வி கணைகளை தொடுக்க தொடங்கினர்.

“உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தை வேதனை” : ரஜினியுடன் கூட்டணி வைக்க தயாரான இந்து மக்கள் கட்சி!

இதன் எதிரொலியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குவோம் என பதிவிட்டது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியல் கட்சி துவங்குவது அறிவித்த சில நொடிகளில் அவருடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து கூற ஆரம்பித்தனர்.

“உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தை வேதனை” : ரஜினியுடன் கூட்டணி வைக்க தயாரான இந்து மக்கள் கட்சி!

இந்நிலையில் கோவை சலிவன் வீதியிலுள்ள ராகவேந்திரா கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ரஜினியின் இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக – அதிமுக கட்சிகளுக்கு ஓட்டளித்து சலித்துப்போன மக்களுக்கு தற்போது ஆன்மீக அரசியலை கொடுப்பேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருப்பது தனக்கு சோகத்தை தந்தது. இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில் அரசியல் பேச துணிச்சல் வேண்டும், அதை ரஜினி தற்போது செய்திருக்கிறார். சாதி , மத, அரசியல் சாயம் பூசுவதை முறியடித்து ரஜினியின் ஆன்மீக அரசியல் மக்களை ஈர்க்கும் . ஆன்மீக அரசியல் கொள்கை கொண்ட கட்சியுடன் இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் ” என்றார்.