இந்து மகாசபா நிர்வாகி கொலை; சிறுவன் உள்பட மூவர் நீதிமன்றத்தில் சரண்

 

இந்து மகாசபா நிர்வாகி கொலை; சிறுவன் உள்பட மூவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி

ஓசூரில் இந்து மகாசபா நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 16 வயது சிறுவன் உட்பட 3 பேர், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்து மகாசபா அமைப்பின் மாநில செயலாளர் நாகராஜ், சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்து மகாசபா நிர்வாகி கொலை; சிறுவன் உள்பட மூவர் நீதிமன்றத்தில் சரண்

இந்த நிலையில் நாகராஜ் கொலை தொடர்பாக அனுமந்தபுரத்தை சேர்ந்த அருண்குமார்(27), ரமேஷ்(39) மற்றும் அவரது 16 வயது மகன் ஆகியோர் இன்று ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, அவர்களிடம், ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை மேற்கொண்டார். அதில் நாகராஜிடம், ரமேஷ் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதும், அதனை திருப்பித் தராததால் பொதுஇடத்தில் வைத்து ரமேஷை தாக்கியதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து குறித்து கேட்ட ரமேஷின் 16 வயது மகனையும், நாகராஜ் தரக்குறைவாக பேசியதால், ஆத்திரமடைந்த ரமேஷ், அவரது உறவினர் அருண் உள்ளிட்டோருடன் சேர்ந்து நாகராஜை கொலை செய்தது தெரியவந்தது.

இந்து மகாசபா நிர்வாகி கொலை; சிறுவன் உள்பட மூவர் நீதிமன்றத்தில் சரண்

இதனையடுத்து 3 பேரும், ஓசூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.