கொரோனா பரிசோதனை அதிகமாக செய்த மாநிலங்களுள் தமிழகம் தொடர்ந்து முதலிடம்!

 

கொரோனா பரிசோதனை அதிகமாக செய்த மாநிலங்களுள் தமிழகம் தொடர்ந்து முதலிடம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெருந்தொற்றாக உருவெடுத்துள்ள இந்த கொடிய வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆரம்பக்கட்டத்தில் இருந்ததை விட பாதிப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எப்போது தான் இந்த கொரோனா பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கொரோனா பரிசோதனை அதிகமாக செய்த மாநிலங்களுள் தமிழகம் தொடர்ந்து முதலிடம்!

இதனிடையே முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த கருத்தையே செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகளவு மக்கள் குணமடைந்து வீடு திரும்புவதாகவும் பரிசோதனைகள் அதிகமாக செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதி படுத்தி இருக்கிறது. கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 31,55,619 பரிசோதனைகள் தெரிவித்துள்ளது.