நீங்கள் வேண்டாம் என கூறும் படியான வரிவிதிப்பு”உற்பத்தி விரிவாக்கம்- கிடப்பில் போட டொயோட்டா முடிவு !

நீங்கள் வேண்டாம் என கூறும் படியான வரிவிதிப்பு”உற்பத்தி விரிவாக்கம்- கிடப்பில் போட டொயோட்டா முடிவு !

இந்தியாவில் அதிகப்படியான வரி காரணமாக, உற்பத்தி விரிவாக்க திட்டங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

நீங்கள் வேண்டாம் என கூறும் படியான வரிவிதிப்பு”உற்பத்தி விரிவாக்கம்- கிடப்பில் போட டொயோட்டா முடிவு !

உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தவும், வெளிநாட்டு நிறுவனங்களை கவரவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக, முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத் தலைவர், சேகர் விஸ்வநாதன் கூறுகையில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதான வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால், உற்பத்தியை அதிகரிக்க முடியாத சூழல் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இங்கு வந்து, முதலீடு செய்த பின்னர் நீங்கள் வேண்டாம் என சொல்வதை போல இந்திய அரசு வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.

நீங்கள் வேண்டாம் என கூறும் படியான வரிவிதிப்பு”உற்பத்தி விரிவாக்கம்- கிடப்பில் போட டொயோட்டா முடிவு !

மேலும், வரிகள் குறைக்கப்படா விட்டாலும், இந்தியாவை விட்டு விலகி செல்லும் திட்டமில்லை என்றும் அதே சமயம் உற்பத்தியை விரிவுப்படுத்தவும் மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.