“சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று; அதிக நிமோனியா காய்ச்சல்” – மருத்துவமனை தகவல்!

“சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று; அதிக நிமோனியா காய்ச்சல்” – மருத்துவமனை தகவல்!

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று; அதிக நிமோனியா காய்ச்சல்” – மருத்துவமனை தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்குச் சென்ற சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார். இந்த சூழலில் நேற்றுமுன்தினம் சசிகலாவுக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது

“சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று; அதிக நிமோனியா காய்ச்சல்” – மருத்துவமனை தகவல்!

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. நுரையீரலில் சளி அதிகமாக இருக்கும் நிலையில் ஆக்சிஜன் அளவு 95 ஆக உள்ளது. நேற்று மாலை 98 ஆக இருந்த ஆக்சிஜன் அளவு இன்று 95 ஆக இருக்கிறது. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.