கொரோனா பாதித்தவரின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? விளக்கம் கேட்கும் நீதிமன்றம்!

 

கொரோனா பாதித்தவரின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? விளக்கம் கேட்கும் நீதிமன்றம்!

வீடுகளில் தகரம் அடிப்பது குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் பொருட்டு சென்னை மாநகராட்சி, வீடுகளில் தகரம் அடித்து மூடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் வெளியே செல்வது தடுக்கப்படுவதால் கொரோனா பரவல் வாய்ப்பு குறையும் என மாநகராட்சி தெரிவிக்கிறது. அண்மையில் சென்னை குரோம்பேட்டை அருகே கொரோனாவில் இருந்து குணமடைந்தவரின் வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் தகரம் அடித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

கொரோனா பாதித்தவரின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? விளக்கம் கேட்கும் நீதிமன்றம்!

இந்த நிலையில் லேசான அறிகுறி இருப்பவர்களை சிகிச்சை மையத்துக்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது என்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பதன் காரணம் என்ன? எந்த விதிமுறைகளின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும், இது குறித்து வரும் 19ம் தேதி அரசும் சென்னை மாநகராட்சியும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.