கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

 

கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலின் அறங்காவலர் ஸ்ரீதரன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். டிரஸ்டிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்கோவிலின் தக்கார் பொறுப்புகள் தன்னிச்சையாக ஏற்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் ஸ்ரீதரன் உள்ளிட்ட அறங்காவலர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான அரசாணையும் அறநிலையத் துறையின் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டிருந்தார்.

கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

இதை எதிர்த்து ஸ்ரீதரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிலங்கள் அபகரிப்பு குறித்து நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். பிறகு, கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்புப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பிரிவுக்கான தொலைபேசி மொபைல், எண்களை கோவில் அலுவலங்களில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். மேலும், அறங்காவலர் ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.