வரி ஏய்ப்பு : ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

 

வரி ஏய்ப்பு : ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர். ஒரே நாளில் எட்டாத தமிழர்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கர் விருதை ஒன்றல்ல, இரண்டை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.

வரி ஏய்ப்பு : ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஏ. ஆர்.ரஹ்மான் ரூ 3.47 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார். இதை ரஹ்மான் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை ரஹ்மானுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வரி ஏய்ப்பு : ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. இதை தொடர்ந்து வழக்கு குறித்து உரிய விளக்கமளிக்க சென்னை உயர்நீதி மன்றம் ஏ. ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது முன்னேற்றத்திற்கு காரணம் தனது தனிமனித ஒழுக்கம் தான் என சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறியிருந்த ரஹ்மான் நிச்சயம் இந்த வழக்கிலிருந்து குற்றமற்றவராக வெளியேறுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.