எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

 

எஸ்.வி.சேகருக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதல்வர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜகவின் எஸ்.வி சேகர், முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாகவும் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மத்திய குற்ற பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

எஸ்.வி.சேகருக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

இதனையடுத்து முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், தேசியக்கொடியை அவமதித்ததற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக பேச மாட்டேன் என வருத்தம் தெரிவித்து மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தேசிய கோடியை அவமதித்ததற்கு எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை காவல்துறை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.