ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிகர லாபம் ரூ.10 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

 

ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிகர லாபம் ரூ.10 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

ஹெஸ்டர் பயோசயின்சஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10 கோடி ஈட்டியுள்ளது.
மருந்து துறையை சேர்ந்த நிறுவனமான ஹெஸ்டர் பயோசயின்சஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹெஸ்டர் பயோசயின்சஸ் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் ஹெஸ்டர் பயோசயின்சஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4.76 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிகர லாபம் ரூ.10 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
ஹெஸ்டர் பயோசயின்சஸ்

2021 மார்ச் காலாண்டில் ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.64.17 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாயாக ரூ.43.62 கோடி ஈட்டியிருந்தது. 2020-21ம் நிதியாண்டில் ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிகர லாபமாக ரூ.34.69 கோடியும், செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.214.33 கோடியும் ஈட்டியுள்ளது.

ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிகர லாபம் ரூ.10 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
ஹெஸ்டர் பயோசயின்சஸ் தயாரிப்பு

ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.03 சதவீதம் சரிந்து ரூ.2,689.05ஆக குறைந்தது.