‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ!

 

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இன்று முதல் 32 மாவட்டங்களில் அமலுக்கு வந்துள்ளது.

1.5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், ஒரு குடும்பம் ஒரு குடும்ப அட்டையின் மூலம் நாடு முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும்.

2.இனி ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ!

3.கைரேகை முறையால் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் உங்கள் குடும்ப அட்டையில் இனி பொருட்கள் வாங்க முடியாது.

4.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும். நியாயவிலை கடைகளில் பொருட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்திற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

5.கடை ஒன்றிற்கு 5 % பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ!

6.திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகை, தென்காசி, தேனி, நீலகிரி, கரூர், திருப்பூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோவை, சிவகங்கை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 32 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

7.தஞ்சாவூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அக். 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.