கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என்று திட்டிய ஊழியர்… முதல்வருக்கு பறந்த போன் கால்!

கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என்று திட்டிய ஊழியர்… முதல்வருக்கு பறந்த போன் கால்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மாநில அரசுகளால் மீண்டும் செயல் படுத்தப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நோயாளிகளின் விவரங்களை சேகரிக்கும்ம், தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என்று திட்டிய ஊழியர்… முதல்வருக்கு பறந்த போன் கால்!

இந்த நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் லக்னோவை சேர்ந்த நோயாளி சந்தோஷ் சிங் என்பவருக்கு கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பெண் ஊழியர் ஒருவர் போன் செய்திருக்கிறார். அப்போது கொரோனாவுக்கான செயலிகளை பதிவிறக்கம் செய்து விவரங்களை அப்டேட் செய்து இருக்கிறீர்களா என அந்தப் பெண் ஊழியர் கேட்டுள்ளார். அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சந்தோஷ் சிங் பதிலளித்துள்ளார்.

கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என்று திட்டிய ஊழியர்… முதல்வருக்கு பறந்த போன் கால்!

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடுப்பான அந்த பெண் ஊழியர், ‘செத்துப்போ’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்திருக்கிறார். கொரோனா பாதிப்பு பற்றியும் செயலிகளை பயன்படுத்துவது பற்றியும் முழுமையான விபரங்களை அறியாத ஒரு நோயாளியிடம் பெண் ஊழியர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சந்தோஷ் சிங் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.