சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!

 

சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தீவிர புயலாக இருக்கும் நிவர், அதிதீவிர புயலாக மாறி நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அச்சமயம், 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!

இந்த நிலையில் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். சென்னை மெரினா கடற்கரையில், கடல் நீர் கரையைத் தாண்டி வெளியேறியிருக்கிறது. அதே போல, சென்னை காசிமேடு பகுதியில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழும்புவதால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.