திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை… ஜோலார்போட்டை ரயில் நிலையத்தை சூழந்த வெள்ளநீர்!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை… ஜோலார்போட்டை ரயில் நிலையத்தை சூழந்த வெள்ளநீர்!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை… ஜோலார்போட்டை ரயில் நிலையத்தை சூழந்த வெள்ளநீர்!

மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், ஏலகிரி மலைப் பகுதிகளில் சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 102 மில்லி மீட்டரும், கேதண்டாபட்டியில் 86 மில்லி மீட்டரும், வாணியம்பாடியில் 86 மில்லி மீட்டரும் மழை பதிவானது. நாட்றம்பள்ளியில் 62.40 மில்லி மீட்டரும், திருப்பத்தூரில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

இதனிடையே, ஜோலார்பேட்டை பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் காலதாமதமாக சென்றது. இதனை அடுத்து, மழைநீரை அகற்றும் பணியில் ரயில்நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.