ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

 

ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. ஈரோடு மாவடடத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று இரவு 8 மணியளவில்

ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, குண்டேரிபள்ளம், பவானிசாகர், பவானி, கொடிவேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து

ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. மேலும், சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 60 மில்லி மீட்டரும், அம்மாபேட்டையில் 41.6 மில்லி மீட்டரும் மழை பதிவானது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.