கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்ட கனமழை… தவிக்கும் மக்கள்!

 

கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்ட கனமழை… தவிக்கும் மக்கள்!

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று பிற்பகல் 12 மணி அளவில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி ஒடிசாவின் பாலசூர் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. புயலால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியானது.

கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்ட கனமழை… தவிக்கும் மக்கள்!

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, கன்னியாகுமரியில் தொடர்ந்து 3 நாட்களாக சூறை காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்து மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்ட கனமழை… தவிக்கும் மக்கள்!

தொடர் கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போல, பெருஞ்சாணி அணையில் இருந்தும் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளில் தண்ணீர் புகுந்து, விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் வேறு பகுதிகளில் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கனமழையால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.