இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்!

 

இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்!

இந்நிலையில் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்!

காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,நாமக்கல், திருவாரூர் ,திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சேலம், தர்மபுரியில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்!

அத்துடன் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை அடையாறு, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில் அதிக அளவில் இருந்து பலத்த மழை பெய்தது.