தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!

 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!

அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள டவ்தே புயல் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று முதல் 5 நாட்களுக்கு தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், கேரளாவின் அச்சன் கோயில் மலையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது..