இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றிரவு முதலே சென்னையில் லேசான மழை பெய்தது. அதேபோல் விழுப்புரம் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை ,சேலம், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9, குன்னூரில் 7, சோத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற இடங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.