தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 18, மேல் பவானியில் 12, வால்பாறை மற்றும் தேவாலாவில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோவை சின்னக்கல்லாரில், சோலையாறில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.