தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.