கொரோனாவைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனா!

 

கொரோனாவைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனா!

சீனாவில் கொரோனா உருவாகி உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. தற்போது சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், அங்கு தற்போது பல மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது. எட்டு மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனா!சீனாவில் கன மழை காரணமாக யாங்ஸ்பு மாகாணத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், ஹோட்டல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தென்மேற்கு மாகாணத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

கொரோனாவைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனா!மொத்தம் 10,700 ஹெக்டேர் விளைநிலங்கள் விளைந்திருந்த பயிர்கள் நாசமாகியுள்ளது. 2800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல் துறையினர், தீயணைப்பு, பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழை வெள்ளம் காரணமாக 26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனா!1998ம் ஆண்டு சீனாவில் மிக மோசமான மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது 2 ஆயிரம் பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். 3000ம் வீடுகள் சேதம் அடைந்தன. தற்போது அது போன்ற மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மழை மேலும் தீவிரமடையும் என்று கூறியிருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.