`2015ஐ விட அதிகமாய் இருக்கும்; சென்னையில் மீண்டும் பெருமழை!’- ஐஐடி ஆய்வு அறிக்கை

 

`2015ஐ விட அதிகமாய் இருக்கும்; சென்னையில் மீண்டும் பெருமழை!’- ஐஐடி ஆய்வு அறிக்கை

2015 பெருமழையை யார் மறந்தாலும் சென்னை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த அளவுக்கு சென்னை மக்களை புரட்டிப்போட்டுவிட்டது பெருமழை. கடந்த 100 ஆண்டு கண்டிராத மழையால் பலர் உயிரிழந்தனர். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது

`2015ஐ விட அதிகமாய் இருக்கும்; சென்னையில் மீண்டும் பெருமழை!’- ஐஐடி ஆய்வு அறிக்கை

இந்த நிலையில், சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்காக SPLICE – காலநிலை மாற்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் ‘கடலோர உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை உள்கட்டமைப்பு மீதான தழுவல் உத்திகள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

இந்த ஆராய்ச்சி இந்தியாவின் குறிப்பிட்ட 4 கடலோர நகரங்களில் நடத்தப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது இருந்த பருவநிலை மாற்றம் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது, “பசுமை இல்ல வாயுக்கள் அதிக அளவில் தற்போது வெளியேறுகிறது. இதன் தாக்கம் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை தொடர்ந்து அதிகரிக்க வைக்கிறது. இந்த பருவ நிலை மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

`2015ஐ விட அதிகமாய் இருக்கும்; சென்னையில் மீண்டும் பெருமழை!’- ஐஐடி ஆய்வு அறிக்கை

அந்த வகையில் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருக்கிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழை பொழிவை உண்டாக்கி மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதை கட்டுப்படுத்தாவிட்டால் சென்னையில் ஓரிரு நாட்கள் பெய்யும் கனமழையால் ஏற்படும் பெரும் வெள்ளத்தால் நகரம் பாதிப்படையும்.

பசுமை இல்லாத வாயு பயன்பாடு காரணமாக சென்னையில் ‘ கனமழை பெய்யும் அளவு மற்றும் கன மழையின் தீவிரம் எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். எதிர்காலத்தில் சென்னையில் முன்பு ஏற்பட்டது போன்ற நிகழ்வு ஏற்பட்டால் வெள்ளம் பல நாட்கள் தொடர வாய்ப்புள்ளது. பசுமை இல்லாத வாய் பயன்பாடு அதிகரிப்பது எதிர்காலத்தில் பேரழிவை எதிர்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்” என்று கூறப்பட்டுள்ளது .