ஆம்பன் புயல் காரணமாக ஒகனேக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர்! – மக்கள் குளிக்கத் தடை

 

ஆம்பன் புயல் காரணமாக ஒகனேக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர்! – மக்கள் குளிக்கத் தடை

ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஒகனேக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இல்லை. புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் பொய்த்துப் போனது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. பென்னாடம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகனேக்கல்லில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. 5500 கன அடி அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

ஆம்பன் புயல் காரணமாக ஒகனேக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர்! – மக்கள் குளிக்கத் தடை
இந்த நிலையில் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் ஒகனேக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 3500 கன அடி தண்ணீர்தான் வருகிறது. ஆறு மாதத்துக்குப் பிறகு ஒகனேக்கல் ஐந்தருவியில் தண்ணீர் கொட்டி வருவதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் யாரும் வராத நிலையில், தண்ணீர் கொட்டியும் பயனில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.