அமெரிக்கா, கனடாவில் கொளுத்தி எடுக்கும் வெயில்… செத்து மடியும் மக்கள்!

அமெரிக்கா, கனடாவில் கொளுத்தி எடுக்கும் வெயில்… செத்து மடியும் மக்கள்!

கனடாவில் உள்ள வடமேற்கு பிராந்தியங்களில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது அனல் காற்று வீசுகிறது. அதேபோல அண்டை நாடான அமெரிக்காவிலும் அதே நிலை தான் நீடித்துள்ளது. நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செலியஸ் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 116 பேரும், வாஷிங்டன்னில் 78 பேரும் கடும் வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, கனடாவில் கொளுத்தி எடுக்கும் வெயில்… செத்து மடியும் மக்கள்!

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கனடாவின் நிலை தான் படுமோசமாக இருக்கிறது. இதுவரை அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, கனடாவில் கொளுத்தி எடுக்கும் வெயில்… செத்து மடியும் மக்கள்!

அதேபோல வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதில் தங்களின் தலைகளை நனைத்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் கனடாவின் பசிபிக் கடற்கரையில் 100 கோடிக்கும் அதிகமான கடல் விலங்குகள் வெப்ப அலைகளால் இறந்திருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.