‘இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயார்’.. நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்!

 

‘இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயார்’.. நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்!

இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தனியார் வங்கிகளோ கடனை செலுத்தியே ஆக வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு வங்கிக்கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே வட்டி செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது.

‘இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயார்’.. நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்!

ஆனால் இஎம்ஐ முறையில் கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து 1 ஆம் தேதி(இன்று) பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன் படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது 2 ஆண்டுகள் கூட கடனை செலுத்த கால அவகாசம் வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிராக நாளை முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.