ஜல்லிக்கட்டு காளை போல துள்ளியெழ செய்யும் ஆண்களுக்கான ஆறு உணவுகள்

 

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளியெழ செய்யும் ஆண்களுக்கான ஆறு உணவுகள்

ஆண்களின் ஆரோக்கியத்தையும் ,ஆண்மையையும்  அதிகரிக்க  பின் வரும் ஆறு  குறிப்பிட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவேண்டும். 

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளியெழ செய்யும் ஆண்களுக்கான ஆறு உணவுகள்

1. ப்ரக்கோலியில் வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன், பொட்டாசியம் மற்றும் சல்ஃபோராஃபேன் என்னும் பைட்டோகெமிக்கல் உள்ளது. இவைகள் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்த உட்பொருட்கள்.

2. ஆண்களுக்கு வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப்பொருள். இதனை உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதோடு, அதில் உள்ள பொட்டாசியம் நரம்புகள், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்துக் கொள்ளும்.. ஆகவே தவறாமல் தினமும் வாழைப்பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

3. ஆண்களுக்கான சூப்பர் உணவுகள் பட்டியலில் மீனும் முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயம், இரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

4. லிச்சி பழம் தற்போது மார்கெட்டுகளில் கிடைக்கிறது. இதனை ஆண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலியக்கத்தை சீராக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

5.பப்பாளி பப்பாளியில் உள்ள அர்ஜினைன் என்னும் நொதி, ஆண் இனப்பெருக்க மண்டலத்தில், இரத்த ஓட்டத்தை தூண்டிவிடும். ஆகவே ஆண்களே படுக்கையில் சிறப்பாக செயல்பட நினைத்தால், பப்பாளியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளியெழ செய்யும் ஆண்களுக்கான ஆறு உணவுகள்

6.மாம்பழத்தின் விதையை பொடி செய்து, அதனை ஆண்கள் அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறைந்து, இதய நோய் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.