“காதில் இயர் போனுடன் தண்டவாளத்தை கடந்த பெண்” – கண் இமைக்கும் நிமிடத்தில் நேர்ந்த கதி!

“காதில் இயர் போனுடன் தண்டவாளத்தை கடந்த பெண்” – கண் இமைக்கும் நிமிடத்தில் நேர்ந்த கதி!

காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு பெண் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்தார்.

இந்தியாவில் விபத்துக்கள் என்பது எப்போதும் தொடர்கதை தான். சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து என விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

“காதில் இயர் போனுடன் தண்டவாளத்தை கடந்த பெண்” – கண் இமைக்கும் நிமிடத்தில் நேர்ந்த கதி!

அதேபோல் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் தண்டவாளத்தை கடக்க அதற்கென போடப்பட்ட வழியை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கவனக்குறைவாக சிலர் கடந்து அதன் மூலம் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
அதேபோல் இன்னும் சிலர் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வருவது அறியாமலே செல்கின்றனர். இதனால் பல உயிர்கள் பறிபோயுள்ளது.

“காதில் இயர் போனுடன் தண்டவாளத்தை கடந்த பெண்” – கண் இமைக்கும் நிமிடத்தில் நேர்ந்த கதி!

இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் என்ற இடத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் ரயில்வே கேட்டை கடந்துள்ளார். அப்போது அந்த பெண் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடக்க சென்றுள்ளார். காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு சென்றதால் ரயில் வருவதை அவர் பார்க்கவில்லை. அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் அதை கண்டுகொள்ளாமல் பெண் பாட்டு கேட்டவாறு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.