“டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரிக்கிறது” – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

 

“டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரிக்கிறது” – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

தமிழகத்தல் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், டெல்டா வகை கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது. அங்கு விரைவில் பரிசோதனை தொடங்க உள்ளது. தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 80% பேர் டெல்டா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.

“டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரிக்கிறது” – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், டெல்டா வகை கொரோனா வைரஸ் 100% பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம். டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. பண்டிகைக் காலம் வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூட்டத்தினால் தான் கொரோனா அதிகமாக பரவுகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டம் கூடாமல் பார்த்துக் கொண்டால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அங்கிருந்து தமிழகம் வருபவர்கள் மூலமாக கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், அதிவேகமாக பரவும் டெல்டா கொரோனா தமிழகத்தில் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.