புளி ஓவரா சாப்பிட்டா ,உடம்புல எங்கெல்லாம் வலி வரும் தெரியுமா ?

 

புளி ஓவரா சாப்பிட்டா ,உடம்புல எங்கெல்லாம் வலி வரும் தெரியுமா ?

ஒரு மாருதி காரையே தாங்கும் திறன் மூட்டுகளுக்கு உண்டு என்கிறார் சித்த மருத்துவர் ஒருவர். ஆனால், இதற்கு சீரான உணவுப் பழக்கமும் சரியான வாழ்வியல் பழக்கமும் உடலுழைப்பும் தேவை. இளம் வயதிலிருந்தே சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்க வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் உள்ள உணவுகள் அனைத்தும் மூட்டுகளுக்கு வலுவூட்ட கூடியவை.

புளி ஓவரா சாப்பிட்டா ,உடம்புல எங்கெல்லாம் வலி வரும் தெரியுமா ?

மூட்டு வலி வராமல் தடுக்க

புளி சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல… மூட்டுகளுக்கு எதிரி. தாய்மார்கள் புளி அதிகம் உணவில் சேர்க்காதீர்கள். தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் போன்ற யாரும் புளிக்குழம்பு, புளியோதரை, புளி சேர்த்து துவையல் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். உடல் எடை அதிகமாக இருந்தாலும் மூட்டு வலி வரும். தினமும் ஒரு கிண்ணம் அளவு பழத்துண்டுகளை சாப்பிடுங்கள். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். தினமும் 2 டம்ளர் மோர் குடிக்கலாம். ஃப்ரெஞ்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு உணவுகள், வாழைக்காய் உணவுகள் ஆகியவை தவிர்க்கலாம். வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் எடுக்க வேண்டாம். முடிந்தவரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மசாஜ் செய்து கொள்வதும் மூட்டு வலிக்கு நல்ல தீர்வு. ஆனால், சரியான இடத்தில் செய்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. தாய்மார்களுக்கு அதிக வேலை இருக்கும் எனினும் அரை மணி நேரமாவது ஓய்வு எடுங்கள்

புளி அமிலத்தன்மை கொண்டது. அதனால் வழக்கமான நுகர்வை காட்டிலும் அதிகமாக எடுக்கும் போது அது பற்களை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. புளி அதிக அளவு சாப்பிடும்போது அது பற்களின் பற்சிப்பி அமில மூலக்கூறூகளால் அரிக்கப்படுகிறது. பற்களின் தோற்றத்துக்கு மோசமான பாதிப்புகளை அதிகப்படியான புளி உண்டாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புளி ஓவரா சாப்பிட்டா ,உடம்புல எங்கெல்லாம் வலி வரும் தெரியுமா ?

கடுமையான பக்கவிளைவுகள் என்றால் அது புளிகளில் இருந்து உண்டாவதுதான். இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் அடிக்கடி புளி சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாவதை ஊக்குவிக்க செய்யும் என்று நிருபனமாகியுள்ளது.

இதனால் மஞ்சள் காமாலை, வயிற்றூப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, செரிமான பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் உடல் நல பிரச்சனைகள் உண்டாக கூடும். பித்தப்பை கல் இருக்கும் போது அதிக புளி, காரம், எண்ணெயில் பொரித்த பொருள்களை தவிர்க்க சொல்வது இதனால் தான்.

அலர்ஜியை உண்டாக்கும் உணவில் புளியும் ஒன்று. இந்த புளியம்பழத்தின் புளிப்பு சுவை உணர்திறன் கொண்டவர்களுக்கு தடிப்புகள், அரிப்பு வீக்கம், இலேசான தலைவலி, மயக்க உணர்வு, வாந்தி பிரச்சனை, மூச்சுத்திணறல் போன்ற பல அறிகுறிகளை உண்டாக்க செய்யும். அதிகமான புளி சேர்த்த உணவு எடுக்கும் போது இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்.