சட்டமன்றத் தேர்தல் : முதல் முறையாக களமிறங்கும் சுகாதாரத்துறை!

 

சட்டமன்றத் தேர்தல் : முதல் முறையாக களமிறங்கும் சுகாதாரத்துறை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. மொத்தமாக 234 தொகுதிகளிலும் சேர்த்து 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 6.28 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இம்முறை கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் அனைத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் : முதல் முறையாக களமிறங்கும் சுகாதாரத்துறை!

அதன் படி, வாக்களிக்க வரும் நபர்களுக்கு கையில் அணிய கையுறை கொடுக்கவும், கிருமி நாசினி, கவச உடைம், மாஸ்க் உள்ளிட்டவற்றை வாங்கவும் தலைமை தேர்தல் அதிகாரி ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் கவச உடை போட்டுக் கொண்டு வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கூடுதலாக ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் : முதல் முறையாக களமிறங்கும் சுகாதாரத்துறை!

பொதுவாக தேர்தல் பணியில் பொதுத்துறை, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த முறை சுகாதாரத்துறை ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஒரு வாக்குச்சாவடியில் 2 பேர் வீதம் மொத்தமாக 1,77,874 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் : முதல் முறையாக களமிறங்கும் சுகாதாரத்துறை!

ஓட்டு போட வரும் மக்களது கைகளில் சானிடைசர் கொடுத்தல், மாஸ்க் வழங்குதல், சமூக இடைவெளியை கண்காணித்தல், கடைசியாக வாக்களிக்க வரும் கொரோனா நோயாளிகளுக்கு கவச உடை வழங்குதல், அவர்கள் வாக்களித்த பிறகு அந்த உடையை பாதுகாப்பாக டிஸ்போஸ் செய்தல் உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.