மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மாதுளை!

 

மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மாதுளை!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களுள் முக்கியமானது மாதுளை. இதை ஊட்டச்சத்து, தாது உப்புக்களின் சுரங்கம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மாதுளை!

ஒரு மாதுளையில் தோராயமாக 7 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் புரதம், ஒரு நாள் தேவையில் 30 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் சி, 36 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் கே, 16 சதவிகிதம் அளவுக்கு ஃபோலேட், 12 சதவிகிதம் அளவுக்கு பொட்டாசியம் உள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிரான ஆற்றல் மிக்கது மாதுளை. தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வருபவர்களுக்கு ப்ராஸ்டேட், மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதுளை உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. ஆய்வுக்காக உயர் ரத்த அழுது;த பாதிப்பு உள்ளவர்களுக்கு தினமும் 150 மி.லி அளவுக்கு மாதுளை சாறு கொடுக்கப்பட்டு வந்தது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து அவர்கள் மாதுளை சாற்றை எடுத்துக்கொண்டனர். 2 வார முடிவில் அவர்கள் ரத்த அழுத்தம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என்று நிபுணர்கள் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

இன்சுலின் செயல்திறன் மேம்படத் தினமும் மாதுளை எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய உடல் இன்சுலினுக்கு எதிராக செயல்படும் தன்மை இதனால் குறைகிறது. டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.