“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து பேசுறேன்” -சிறையிலிருந்தபடியே பல கோடி சம்பாதித்த ரௌடி.

 

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து பேசுறேன்” -சிறையிலிருந்தபடியே பல கோடி சம்பாதித்த ரௌடி.

சிறையிலிருக்கும் ஒரு ரௌடி, போனிலேயே மிரட்டி பலரிடமிருந்து பணம் பறித்த விவகாரத்தால் போலீசாரும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் .

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து பேசுறேன்” -சிறையிலிருந்தபடியே பல கோடி சம்பாதித்த ரௌடி.


டெல்லியின் மண்டோலி சிறைக்குள் விகாஸ் என்ற ரௌடி சில வருடங்களாக கொலை கொள்ளை வழக்கி சிக்கியதால் அடைக்கப்பட்டார் . அந்த ரௌடிக்கு சிறையிலிருந்து வெளியே போன பிரமோத் என்ற நபர் பல சிம்கார்டுகளை வாங்கி ,சிறை வார்டன் ராஜேந்தர் என்பவர் மூலம் வழங்கப்பட்டது .அப்போது அவர் ஒரு சிம் கார்டு 2000 ரூபாய்க்கு விற்றுள்ளார் .
அந்த சிம்கார்டுகள் மூலம் அந்த ரவுடி விகாஸ் வெளியிலிருக்கும் பல பணக்காரர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார் .இந்த மிரட்டல் சமீபத்தில் ஆகஸ்டு 22ம் தேதி ஒரு செல்வந்தருக்கும் வந்துள்ளது .அவர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .
போலீசார் அவருக்கு மிரட்டல் வந்த போன் நம்பரை ட்ரேஸ் செய்த போது, அந்த நம்பர் ப்ரமோத் என்பவரின் பெயரில் இருப்பதை கண்டு அவரை பிடித்து விசாரித்தபோது ,அவர் தன்னுடைய பெயரில் சிறையிலிருக்கும் ரவுடி விகாஸுக்கு ,சிறை வார்டன் ராஜேந்தர் மூலம் சிம் கார்டு வாங்கிக்கொடுத்த விஷயத்தை கூறினார் .
இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார் அந்த சிறை வார்டனையும் ,அந்த ரௌடி விகாஸையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் ,தாங்கள் இப்படி பல பணக்காரர்களை இப்படி மிரட்டுவதாகவும் ,பிறகு தங்களின் ஆட்கள் அவர்களிடம் சென்று பணத்தை வாங்கி வந்ததாகவும், பிறகு அந்த பணத்தை அனைவரும் பங்கிட்டு கொள்வதாகவும் கூறினார்கள் .பிறகு போலீசார் அனைவரின்மீதும் வழக்கு பதிவு செய்தனர் .

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து பேசுறேன்” -சிறையிலிருந்தபடியே பல கோடி சம்பாதித்த ரௌடி.