ஓவைசி ஒன்னும் காட்பாதர் கிடையாது… மத அடிப்படையில் வாக்களிக்காதீங்க.. மேற்கு வங்க இமாம் சங்க தலைவர்

 

ஓவைசி ஒன்னும் காட்பாதர் கிடையாது… மத அடிப்படையில் வாக்களிக்காதீங்க.. மேற்கு வங்க இமாம் சங்க தலைவர்

அசாதுதீன் ஓவைசி ஒன்னும் காட்பாதர் அல்ல. மதத்தின் அடிப்படையில் வாக்களிக்காதீங்க என்று மேற்கு வங்க இமாம் சங்க தலைவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று அம்மாநில கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடும் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து அசாதுதீன் ஓவைசி ஆதரவு திரட்டி வருகிறார்.

ஓவைசி ஒன்னும் காட்பாதர் கிடையாது… மத அடிப்படையில் வாக்களிக்காதீங்க.. மேற்கு வங்க இமாம் சங்க தலைவர்
முகமது யஹ்யா

இந்த சூழ்நிலையில், அசாதுதீன் ஓவைசி ஒரு காட்பாதர் அல்ல, மத அடிப்படையில் வாக்களிக்காதீங்க என்று மேற்கு வங்க இமாம் சங்க தலைவர் கூறியிருப்பது ஓவைசிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க இமாம் சங்க தலைவர் முகமது யஹ்யா இது தொடர்பாக கூறியதாவது: மேற்கு வங்கத்தில் மதத்தின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. ஓவைசியின் எழுச்சி வங்கத்தில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் இங்குள்ள மக்கள் வளர்ச்சியை நம்புகிறார்கள்.

ஓவைசி ஒன்னும் காட்பாதர் கிடையாது… மத அடிப்படையில் வாக்களிக்காதீங்க.. மேற்கு வங்க இமாம் சங்க தலைவர்
பா.ஜ.க.

அவர் சொல்வதை மக்கள் பின்பற்ற அவர் ஒரு காட்பாதர் அல்ல. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும், பா.ஜ.க.வும் மத அடிப்படையில் அரசியலை அணுகுகின்றன. பா.ஜ.க. போலவே ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் மேற்கு வங்கத்தை பிரிக்க முயற்சிக்கிறது. தேர்தல் என்பது அனைவருக்கும். இந்து ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் அல்லது முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமல்ல. சிறுபான்மை ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் ஏன் ஏ.ஐ.எம்.ஐ.எம். தேர்தலில் போட்டியிட விரும்புகிறது? தயுவு செய்து மத நடைமுறையின் அடிப்படையில் வாக்குகளை கேட்காதீங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.