இந்த பேரழிவு உங்களால் ஏற்பட்டது… மக்களை காப்பாற்ற உடனே மருந்து வாங்குங்க.. எச்.டி.குமாரசாமி ஆவேசம்

 

இந்த பேரழிவு உங்களால் ஏற்பட்டது… மக்களை காப்பாற்ற உடனே மருந்து வாங்குங்க.. எச்.டி.குமாரசாமி ஆவேசம்

கருப்பு பூஞ்சை நோய் அதிகரிப்பை குறிப்பிட்டு, இந்த பேரழிவு உங்களால் ஏற்பட்டது, மக்களை காப்பாற்ற உடனே குறைந்தபட்சம் 20 ஆயிரம் டோஸ் ஆம்போடெரிசன் பி மருந்து கொள்முதல் செய்யுங்க என கர்நாடக அரசை எச்.டி. குமாரசாமி வலியுறுத்தினார்

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் ஏற்கனவே மக்களை அபாயத்தை நோக்கி தள்ளி ஒரு ஆபத்தான முடிவை எட்டியுள்ளோம். இனி மருந்து வாங்குவதற்கான முடிவை தாமதப்படுத்த வேண்டாம் என்று மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இறப்பு விகிதத்தில் அதிகரிப்பை மாநிலம் காண்கிறது. மாநிலத்தில் போதிய அளவில் மருந்துகள் இல்லாததால், கொரேனாவிலிருந்து குணமடைந்தவர்களை மீண்டும் மற்றொரு ஆபத்தான நோய்த்தொற்றுக்கு நாம் வெளிப்படுத்துகிறோம். மருத்துவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின்படி, மருத்துவமனையில் பயன்படுத்தும் உபகரணங்கள் காரணமாக மியூகோமைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) பரவுகிறது.

இந்த பேரழிவு உங்களால் ஏற்பட்டது… மக்களை காப்பாற்ற உடனே மருந்து வாங்குங்க.. எச்.டி.குமாரசாமி ஆவேசம்
பா.ஜ.க.

கர்நாடகாவுக்கு 1050 டோஸ் ஆம்போடெரிசின் பி மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் 16,500க்கும் மேற்பட்ட டோஸ் ஆம்போடெரிசின் பி ஊசி உள்ளது. நாங்கள் ஏற்கனவே கருப்பு பூஞ்சை கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மாநிலத்துக்கு போதுமான ஆம்போடெரிசின் பி சப்ளை இல்லையென்றால் அது எப்படி சாத்தியமாகும். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு படுக்கையை ஒதுக்குவது தீர்வு அல்ல என்பதை அரசாங்கமும், அமைச்சர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஆம்போடெரிசின் பி மருந்து வாங்குவதும் அதனை பயன்படுத்துவதும் தீர்வாகும். நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின் பி மருந்துடன் சிகிச்சை அளிக்கவில்லையென்றால் அதிகமான நோயாளிகள் தொற்றுநோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.

இந்த பேரழிவு உங்களால் ஏற்பட்டது… மக்களை காப்பாற்ற உடனே மருந்து வாங்குங்க.. எச்.டி.குமாரசாமி ஆவேசம்
ஆம்டோடெரிசின் பி

இந்தியாவில் 7 மருந்து நிறுவனங்களும், வெளிநாடுகளில் 4 நிறுவனங்களும் ஆம்போடெரிசின் பி மருந்து தயாரிக்கின்றன. இந்த நிறுவனங்களிடமிருந்து மருந்து வாங்கலாம். குறைந்தபட்சம் 20 ஆயிரம் டோஸ் ஆம்போடெரிசன் பி கொள்முதல் செய்யுமாறு நான் மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பாற்றுவதற்கான உறுதிபாட்டை அரசாங்கம் காட்ட வேண்டும். மேலும் மருந்து வாங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேரழிவு உங்களால் (பா.ஜ.க. அரசாங்கம்) ஏற்பட்டது. முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நீங்கள் கர்நாடகாவில் அத்தகைய நிலைமைக்கு இட்டுக் செல்கிறீர்கள். கர்நாடக மக்களை காப்பாற்ற குறைந்தது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆம்போடெரிசின் பி டோஸ்களை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.