கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… பிரச்சினை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு… வெள்ளை கொடி காட்டும் குமாரசாமி

 

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… பிரச்சினை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு…  வெள்ளை கொடி காட்டும் குமாரசாமி

கர்நாடகாவில் பிரச்சினை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 2018 மே மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜ.க. அதிக இடங்களை வென்ற போதிலும் அந்த கட்சியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர கூடாது என்பதற்காக மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீடிக்கவில்லை. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவியதால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜூலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜக. ஆட்சியை அமைத்தது.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… பிரச்சினை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு…  வெள்ளை கொடி காட்டும் குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

கோவிட்-19 நிர்வாகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க. அரசை குமாரசாமி கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த சூழ்நிலையில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பசவராஜ் ஹெராட்டி, தனது கட்சியும், பா.ஜ.க.வும் இயற்கை நட்பு கூட்டணிகள் என்று தெரிவித்து இருந்தார். இதனால் பா.ஜ.க.வுடன் மதசார்ப்பற்ற ஜனதா தளம் இணைக்கப்படலாம் என்று யூகங்கள் உலா வர தொடங்கின. இந்த சூழ்நிலையில், நேற்று குப்பி சட்டப்பேரவை தொகுதி மதசார்ப்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ஸ்ரீனிவாஸ் கூறுகையில், மதசார்ப்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க.வுடன் கைகோர்த்தால் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மண்டல தலைவர்கள் மற்றொரு மதசார்ப்பற்ற கட்சியை தேடி செல்லலாம். பா.ஜ.க.வின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுடன் நான் ஒரு போதும் உடன்படவில்லை என்று எச்சரிக்கை செய்தார்.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… பிரச்சினை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு…  வெள்ளை கொடி காட்டும் குமாரசாமி
எஸ்.ஆர். ஸ்ரீனிவாஸ்

இதனையடுத்து உடனடியாக மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தொடர்ச்சியான டிவிட்டுகளில், சுயமரியாதையுடன் கன்னடர்களின் கட்சியாக இருக்கும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் அரசியல் இணைப்பு (பா.ஜ.க.வுடன்) இணைப்பு குறித்து ஒரு போதும் சிந்திக்காது. மக்களின் குரலாக இருக்கும் கட்சி, இது போன்ற முட்டாள்தனத்தை ஒரு போதும் செய்யாது. அதிகபட்சமாக வரும் நாட்களில் மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் நாங்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு வழங்கலாம். அரசியல் இணைப்பு குறித்த எந்த கற்பனை அறிக்கைகளுக்கும் எந்த முக்கியத்துவம் இல்லை என்று பதிவு செய்து இருந்தார்.