பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மத்திய அரசின் தோல்வியால் கடுமையான நெருக்கடியில் மாநிலங்கள்.. குமாரசாமி

 

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மத்திய அரசின் தோல்வியால் கடுமையான நெருக்கடியில் மாநிலங்கள்.. குமாரசாமி

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மத்திய அரசின் தோல்வியால் மாநிலங்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளன என எச்.டி. குமாராசாமி குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின தலைவருமான எச்.டி. குமாரசாமி, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் குறைபாடு, தொலைநோக்கு பார்வை இல்லாதது போன்ற மையத்தின் தோல்வி காரணமாக மாநிலங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குமாறு மாநிலங்களிடம் சொல்வதற்கு பதிலாக, மத்திய அரசே ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மத்திய அரசின் தோல்வியால் கடுமையான நெருக்கடியில் மாநிலங்கள்.. குமாரசாமி
எச்.டி. குமாரசாமி

மாநிலங்களின் ஜி.எஸ்.டி. பற்றாக்குறை தொடர்பான தனது உறுதிப்பாட்டை கைவிடுவதில் மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. கோவிட்-19 தொற்றுநோயால் எழும் நெருக்கடியை எதிர்பாராத கடவுளின் செயலாக விவரிப்பதன் மூலம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு ஒரு அடியை கொடுத்தது. நீண்ட காலத்துக்கு முன் இந்திய அரசியலமைப்பை கட்டமைத்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மாநிலங்களின் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வரும் சட்டங்களை கொண்டுவருவதன் அபாயத்தை எதிர்காலத்தில் நிராகரிக்க முடியாது என கவலை தெரிவித்து இருந்தார். இப்போது அது போன்ற அபாயம் தொடங்கியுள்ளது.

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மத்திய அரசின் தோல்வியால் கடுமையான நெருக்கடியில் மாநிலங்கள்.. குமாரசாமி
இந்திய ரிசர்வ் வங்கி

மத்திய அரசு மாநிலங்களுக்கு முன் 2 வாய்ப்புக்களை வைத்துள்ளது. ஜி.எஸ்.டி. பற்றாக்குறை தொகையான ரூ.97 ஆயிரம் கோடி அல்லது ஜி.எஸ்.டி. பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 நிலைமை காரணமாக எழுந்துள்ள மொத்த வருவாய் இடைவெளியான ரூ.2.35 லட்சம் கோடியை கடன் வாங்கலாம். இது போன்ற சூழ்நிலையால் அதிர்ச்சி அடைந்த மாநிலங்கள் கலக்கம் அடைந்துள்ளன. கோவிட்-19ஐ காரணம் காட்டி மாநிலங்களுக்கு அநீதி ஏற்படுத்தினால் அவை என்ன செய்ய முடியும்? கோவிட்-19 மற்றும் வெள்ளம் காரணமாக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் மாநிலங்கள் மத்திய அரசை சபிக்கின்றன. இவ்வாறு அவர் பதிவு செய்து இருந்தார்.