எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,982 கோடி… பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவிப்பு

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,982 கோடி… பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவிப்பு

2020 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,982 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இந்தியாவின் 3வது பெரிய சாப்ட்வேர் சேவைகள் வழங்கும் நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,982 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 26.7 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,142 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,982 கோடி… பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.19,302 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.18,594 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,982 கோடி… பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 இடைக்கால டிவிடெண்டாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2021 பிப்ரவரி 8ம் தேதியன்று இடைக்கால டிவிடெண்டுக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்படும் என்று எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.