#HBDதேசியத்தலைவர்66 .. அன்பின் நெகிழ்வோடு தம்பிகள்

 

#HBDதேசியத்தலைவர்66 .. அன்பின் நெகிழ்வோடு தம்பிகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 66வது பிறந்த தினம் இன்று.

இலங்கை வல்வெட்டித்துறையில் 26.11.1954ல் பிறந்த பிரபாகரன், தமிழீழப்போராளியான பிரபாகரனை, தமிழ்த்தேசியத் தலைவராக கொண்டாடுகிறார்கள் உலகத்தமிழர்கள்.

#HBDதேசியத்தலைவர்66 .. அன்பின் நெகிழ்வோடு தம்பிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான தடை இன்னமும் நீடித்துக்கொண்டே தான் செல்கிறது. ஆனாலும்,HBDமேதகுPRABHAKARAN , HBDதேசியத்தலைவர்66 ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள் தமிழர்கள்.

எனது உயிர் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அன்பின் நெகிழ்வோடு தம்பி… என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்த்துக்கள் கூறி, HBDதேசியத்தலைவர்66 என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்திருக்கிறார்.

உலகம் வியந்த உன்னதப் போராளியின் பிறந்தநாளில் ஈழம் வென்றெடுக்க உறுதியேற்போம்! என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், HBDTamilsLeaderPrabhakaran என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்திருக்கிறார்.

அண்ணன் இருக்கிறேன் துணிந்து களமாடுங்கள்” – என மார்போடு அணைத்து என்னை மனமார வாழ்த்திய மேதகு அண்ணன் பிரபாகரன் என்றும் திருமாவளவன் நினைவு கூர்ந்திருக்கிறார்.

#HBDதேசியத்தலைவர்66 .. அன்பின் நெகிழ்வோடு தம்பிகள்